திமுகவும் காங்கிரஸும் பரஸ்பரம் பிரிவதுதான் நல்லது என்றும் இருபுறமும் தடித்த வார்த்தைகாளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
மேலும், 2014 ஆம் ஆண்டு கூட, தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு நீண்ட கால கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியை திமுக வெளியேற்றியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
''ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவை மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன.
தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜய்யை மக்கள் முதலமைச்சர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல.
ஆளுநருக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன். ஆளுநர் மாளிகை வழியாக பாஜக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும். ஆளுநர் அவர்கள் தவெக தலைவர் விஜய்யை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து இன்று (மே 6) உரிமை கோரிய நிலையில், ஆதரவு எம்.எல்.ஏக்களின் முழுப் பட்டியல் கொடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், விஜய் திட்டமிட்டபடி நாளை முதல்வராகப் பதவியேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் மற்ற கட்சிகளிடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Summary
One should avoid using harsh words: congress mp Jothimani
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி

மோடி, அமித் ஷாவுக்குப் பணிந்து மக்களின் தீர்ப்பை ஆளுநர் மாற்ற நினைப்பது தவறு! ஜோதிமணி
திமுககூட காங்கிரஸை வெளியேற்றியிருக்கிறது: ஜோதிமணி

பாஜகவைப்போல கூட்டணிக் கட்சிகளை அழித்து எங்களுக்கு பழக்கமில்லை! ஜோதிமணி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


