பாஜகவைப்போல கூட்டணிக் கட்சிகளை அழித்து எங்களுக்கு பழக்கமில்லை என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச பாஜகவிற்கு எந்த அருகதையும் இல்லை.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கூட்டணி கட்சிகளையும் அழித்துவிட்டு அவர்கள் இடத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளதை பாஜக நினைவில் கொள்ளட்டும்.
அஸ்ஸாம் கண பரிஷத், சிரோமணி அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, சிவசேனை, ஹெச்விஎம், அதிமுக உள்பட பாஜக அழித்தொழித்த கட்சிகளின் பட்டியல் வெகு நீளம்.
பாஜக தமிழ்நாட்டை அழிக்கத் துடிப்பதால்தான் அதைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. எங்களுக்கு எந்தக் கூட்டணிக் கட்சிகளையும் அழித்துப் பழக்கமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
Summary
Unlike the BJP, we are not in the habit of destroying our alliance partners: Jothimani
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி

மோடி, அமித் ஷாவுக்குப் பணிந்து மக்களின் தீர்ப்பை ஆளுநர் மாற்ற நினைப்பது தவறு! ஜோதிமணி
திமுககூட காங்கிரஸை வெளியேற்றியிருக்கிறது: ஜோதிமணி
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


