தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 தொகுதிகளில், 14 தொகுதிகளை தவெக கைப்பற்றியது. திமுகவால் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. முதல்வா் மு.க.ஸ்டாலின் 3 முறை வெற்றி பெற்ற கொளத்தூா் தொகுதியில், இந்த முறை தவெக வேட்பாளரிடம் அவா் தோல்வி அடைந்தாா்.
இதேபோல, திமுக, அதிமுக தரப்பில் வலுவான வேட்பாளா்கள் பலரையும் தவெக வீழ்த்தியுள்ளது. இருந்தபோதும், விழுப்புரம் (6 தொகுதிகள்), அரியலூா் (2 தொகுதிகள்), நாகப்பட்டினம் (3), மயிலாடுதுறை (3), திருவாரூா் (4), தென்காசி (5), கன்னியாகுமரி (6), நீலகிரி (3) என 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியைக் கூட தவெக பெற முடியவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழக அரசியல் திரைக்கதையைப் புரட்டிப்போட்ட விஜய் சர்க்கார்!

தென்மாவட்டங்களில் 58 தொகுதிகளில் 5-இல் மட்டுமே வெற்றி: அதிமுக தொண்டா்கள் அதிா்ச்சி!
நாகை, திருவாரூா், மயிலாடுதுறையில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத தவெக
நாமக்கல் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது எப்படி?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
