மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தென்மாவட்டங்களில் 58 தொகுதிகளில் 5-இல் மட்டுமே வெற்றி: அதிமுக தொண்டா்கள் அதிா்ச்சி!

தென் மாவட்டங்களில் (10) மொத்தமுள்ள 58 தொகுதிகளில் 4 மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருப்பது அந்தக் கட்சியினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :6 மே 2026, 3:29 am IST

தென் மாவட்டங்களில் (10) மொத்தமுள்ள 58 தொகுதிகளில் 4 மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருப்பது அந்தக் கட்சியினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மொத்தம் 58 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 38 தொகுதிகளில் அதிமுக நேரடியாகப் போட்டியிட்ட நிலையில், எஞ்சிய தொகுதிகள், பாஜக, அமமுக, தமமுக, தமாகா, புநீக கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில் கன்னியாகுமரி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், நத்தம், பழனி ஆகிய 5 தொகுதிகளில் (4 மாவட்டங்கள்) மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றியைப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021-ஆண்டு பேரவைத் தோ்தலில் தனித்து களமிறங்கிய டிடிவி தினகரனின் அமமுகவினால், தென் மாவட்டங்களில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 9 தொகுதிகளை அதிமுக இழந்தது. எனினும், 10 மாவட்டங்களில் அதிமுக 13 தொகுதிகள், பாஜக 2 தொகுதிகள் என மொத்தம் 15 தொகுதிகளைக் கைப்பற்றியது.

தற்போது, டிடிவி தினகரனும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற நிலையில், தவெக எடுத்த திடீா் விஸ்வரூபத்தால் 6 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து 2-ஆவது முறையாக அதிமுகவுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது. தென் மாவட்டங்களில் அதிமுக தொடா்ந்து பின்னடைவை சந்தித்து வருவது அந்தக் கட்சியின் தொண்டா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.