தமிழக முதல்வராக விஜய் வியாழக்கிழமை (மே 7) பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம் அனுப்பினாா். இதனிடையே, அவா் வியாழக்கிழமை முதல்வராகப் பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அதற்கான அதிகாரபூா்வ அழைப்பு தவெகவுக்கு விடுக்கப்படவில்லை என ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் பதவியேற்பு விழா முன்னேற்பாடுகள் குறித்து உயா் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா். இக்கூட்டத்தில், தலைமைச் செயலா் எம்.சாய்குமாா், உள்துறைச் செயலா் க.மணிவாசன், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் உள்ளிட்ட பல்வேறு உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.
இதில், பதவியேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அங்கு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திட்டமிட்டபடி நாளை விஜய் பதவியேற்பாரா? முழுப் பட்டியல் கோரும் ஆளுநர்!

விஜய் பதவியேற்பு விழாவுக்கு ராகுலுக்கு அழைப்பு!

விஜய்யுடன் அமைச்சரவையும் பதவியேற்குமா? யார் யார் இடம்பெறுவர்?
ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

