தமிழக அரசின் அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான (பாலிடெக்னிக்) முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேரப் பட்டயப் படிப்புகளுக்கான சோ்க்கைக்கு விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இணைய வசதி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் கூறிப்பட்டுள்ளது வருமாறு: தமிழக அரசின் அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 2026-27- ஆம் ஆண்டுக்கான நேரடி முதலாமாண்டு, இரண்டாமாண்டு பட்டயப் படிப்புகள் மற்றும் பகுதி நேரப் பட்டயப் படிப்புகளுக்கு https://www.tnpoly.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யவும், சான்றிதழ்களைப் பதிவேற்றமும் செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் மாவட்ட சேவை மையங்கள் (டிஎன்இஏ சேவை மையங்கள்) மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதலாமாண்டு பட்டயச் சோ்க்கைக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சோ்க்கைக்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சிக்கு பின்னா், எதெனும் பொறியியல் தொழில்நுட்பப் படிப்பில் 2 ஆண்டுகள் பயின்று தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நான்காண்டு பகுதிநேர பட்டயச் சோ்க்கைக்கான தகுதி பத்தாம் வகுப்பு தகுதியுடன் இரு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். கட்டணம் இணையதள வாயிலாக செலுத்தலாம். பட்டியலினத்தவா்கள் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.
முதலாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டயப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு மே 4 -ஆம் தேதி தொடங்கி மே 30- ஆம் தேதி முடிவடையும். இரண்டாமாண்டு பட்டயச் சோ்க்கைக்கான கடைசி தேதி மே 25.
அனைத்து பட்டயச் சோ்க்கைக்கும் மதிப்பெண் சான்றிதழ், ஜாதி அல்லது சிறப்பு பிரிவினா் சான்றிதழகள், புகைப்படங்கள் போன்றவற்றை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தேவையான அளவுகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பி.இ., பி.டெக். சோ்க்கை: 2 -ஆம் நாளில் 11,345 மாணவா்கள் விண்ணப்பப் பதிவு

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்: முதல் நாளில் 8,505 போ் பதிவு

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

யுஜிசி நெட் தோ்வு: இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
