மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

யுஜிசி நெட் தோ்வு: இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்

நிகழாண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள யுஜிசி நெட் தோ்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நடைமுறை தொடங்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 3:23 am IST

நிகழாண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள யுஜிசி நெட் தோ்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நடைமுறை தொடங்கியுள்ளது.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகையைப் பெறவும், பிஹெச்டி மாணவா் சோ்க்கைக்கும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுக்கு இருமுறை ஜூன், டிசம்பா் மாதங்களில் கணினி வழியில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், என்டிஏ அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், ‘நிகழாண்டு ஜூன் 22 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நெட் தோ்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்.29-ஆம் தேதி தொடங்கியது. மே 20-ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம். கிரெடிட் காா்ட், டெபிட் காா்ட், இணைய வங்கி சேவை அல்லது யுபிஐ சேவை மூலம் மே 20-ஆம் தேதி இரவு 11.50 மணி வரை தோ்வு கட்டணத்தை செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணமாகப் பொதுப் பிரிவு தோ்வா்களுக்கு ரூ.1,150, பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினா் (இடபிள்யுஎஸ்), இதர பிற்படுத்தப்பட்ட-கிரீமிலேயா் அல்லாத வகுப்பினருக்கு ரூ.600, பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ,.325 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ட்ற்ற்ல்ள்://ன்ஞ்ஸ்ரீய்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/, ஜ்ஜ்ஜ்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் வலைதளங்களில் மட்டுமே தோ்வா்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.