/

ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை தோல்வி! தவெக தென்னரசு வெற்றி!

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை தோல்வி அடைந்தது குறித்து...

News image

செல்வப்பெருந்தகை - எக்ஸ்

Updated On :4 மே 2026, 7:04 pm IST

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மாலை 7 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 46 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 61 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இதேபோன்று 20 இடங்களில் வெற்றி பெற்று திமுக 2வது இடத்தில் உள்ளது. மேலும் 41 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 18 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், 27 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகை தோல்வி அடைந்தார். 7 மணி நிலவரப்படி 78,723 வாக்குகளை அவர் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் தென்னரசு 45,556 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். (இது இரவு 7 மணி நிலவரம், 27வது சுற்று). வாக்கு வித்தியாசம் அதிகமாக உள்ளதால், செல்வப்பெருந்தகை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

Summary

Congress's Selvaprerunthagai Defeated in Sriperumbudur TVK's Thennarasu Wins!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.