சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்டங்கள் மற்றும் வேலூரில் மே 5 வரை கடும் வெப்ப நிலை நிலவும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கோடை வெய்யிலின் தாக்கம் நடப்பு ஆண்டு அதிக அளவு உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக வெய்யில் 100 டிகிரியை தாண்டி வருகிறது.
இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நிலவும் வெப்பநிலை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீன் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”பல நாள்கள் இடைவெளிக்குப் பிறகு, கரூர், தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் தீவிர இடியுடன் கூடிய மழை பதிவாகியுள்ளது. உள் தமிழகம், தெற்கு மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் மேலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், – 42.4°C : இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை
சென்னை மீனம்பாக்கம் – 40.2°C : இந்த ஆண்டின் முதல் 40°C+ பதிவு
சென்னை நுங்கம்பாக்கம் – 38°C : இந்த ஆண்டின் அதிகபட்சம்
திருத்தணி – 40.6°C : இந்த ஆண்டின் அதிகபட்சம்
அடுத்த 5 நாள்கள் (மே 5 வரை), வேலூரிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் வரை கடும் வெப்பம் நிலவும். அதன் பிறகு வெப்பநிலை குறையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Tamil Nadu Weatherman Pradeep John has stated that severe heat conditions will prevail in Chennai, its suburban districts, and Vellore until May 5.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3.5.1976: சென்னையில் அனல் காற்று: உஷ்ண நிலை 110 டிகிரியானது

சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்!

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏப்.18 வரை மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


