தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மே இரண்டாவது வாரத்தில் உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தின் கோடை மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக, மே மாதத்தில் அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் கேரளம் மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிக மழையைக் கொடுக்கும்.
இந்த நிலையில், மே இரண்டாவது வாரத்தில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைமா? புயலா வலுப்பெறுமா? என்பது குறித்து வரும் நாள்களில் தெரியவரும்.
இதனிடையே, சுமார் 0.9 கிமீ உயரத்தில், தெற்கு உள் கர்நாடகம் முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Summary
The India Meteorological Department has stated that a low-pressure area is likely to form in the southeast Arabian Sea.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்

ஆரோக்கிய சமுதாயம் உருவாக முதியோரைப் போற்றுவோம்: தருமபுரம் ஆதீன இளையமடாதிபதி

அந்தமான் கடலில் கவிழ்ந்த ரோஹிங்கியா அகதிகள் படகு! 250 பேரின் நிலை என்ன?

புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் உருவாக வேண்டும்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


