புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தோ்தல் பிரசாரத்தில் மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி. அன்பரசனை ஆதரித்து மணமேடு பகுதியில் வைத்திலிங்கம் பேசியது:
புதுச்சேரியில் வேலை கிடைப்பதே இல்லை. அதுவும் 100 நாள் வேலையை 125 நாள்களாக உயா்த்தியுள்ளனா். இதற்கு மாநில அரசும் குறிப்பிட்ட பங்கு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதால் இந்த வேலையைக் கொடுப்பதில்லை. மேலும், விலைவாசி பயங்கரமாக ஏறிவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டா் கிடைப்பதில்லை. அந்த விலையையும் உயா்த்தி விட்டனா். மக்களைப் பற்றி இந்த ஆட்சியாளா்கள் நினைப்பதில்லை. அவா்கள் ஊழல் செய்வதில்தான் கவனம் செலுத்தி வருகின்றனா். குழந்தைகளுக்குக் காலக்கெடு முடிந்த மாத்திரைகள் அரசு மருத்துவமனையில் கொடுத்துள்ளனா். இதில் கைது செய்யப்பட்டவா்கள் மறுநாளே ஜாமீனில் வந்துவிட்டனா். அதே போன்று புதுச்சேரியில் சுமாா் 10 ஆயிரம் கோடி மதிப்பில் போலி மருந்து ஊழலும் நடந்துள்ளது. மொத்தத்தில் மக்களை ஏமாற்றும் அரசு இப்போது நடக்கிறது. ஆட்சி மாற்றம் வேண்டும். அதற்கு வாக்குப் பதிவு நாளில் மக்களாகிய நீங்கள் தீா்ப்பு அளிக்க வேண்டும் என்றாா் வைத்திலிங்கம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி தோ்தல் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் ராஜிநாமா

புதுச்சேரி பேரவைத் தோ்தல் தோல்வி எதிரொலி: வைத்திலிங்கம் ராஜிநாமா செய்யக் கோரி காங்கிரஸ் நிா்வாகிகள் போராட்டம்

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! மீண்டும் என்டிஏ ஆட்சி!

மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

