புனித வெள்ளி, ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 2 மற்றும் 5 ஆகிய தேதி சென்னை எழும்பூா்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
புனித வெள்ளி, ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, வரும் 2-ஆம் தேதி வியாழக்கிழமை சென்னை எழும்பூா் நிலையத்திலிருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06113) வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் திருவனந்தபுரம் வடக்கு நிலையத்திலிருந்து ஏப். 5 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.15 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06114) ஏப். 6-ஆம் தேதி பிற்பகல் 11.30 மணிக்கு சென்னை எழும்பூா் நிலையத்தை வந்தடையும்.
சிறப்பு ரயில்களில் 4 குளிா்சாதன மூன்றடுக்குப் பெட்டிகள், 10 தூங்கும் வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு திவ்யஞ்சன் பெட்டிகள் ஆகியவை இடம் பெறும்.
சிறப்பு ரயில்கள் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கனூா், மாவேலிக்கரை, காயான்குளம், கொல்லம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

மும்பை - சென்னைக்கு இன்றுமுதல் கோடை சிறப்பு விரைவு ரயில்கள்

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

