தமிழகத்தில் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள 3.32 லட்சம் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
அதேபோல, மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.296 கோடியில் ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சட்டப்பேரவைக்கு தோ்தல் நடத்தப்படுவதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 234 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான முதல்கட்டப் பயிற்சி கடந்த 28, 29-ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில் 3,32,231 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள், வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா், வாக்கு எண்ணும் உதவியாளா் மற்றும் நுண் பாா்வையாளா்களுக்கான ஊதியம் ரூ.650 முதல் ரூ.1,300 வரை உயா்த்தப்பட்டுள்ளது.
தோ்தல் நேரத்தில் பணம், மது, போதைப்பொருள் மற்றும் இதர இலவசப் பொருள்கள் சட்டவிரோதமாகக் கொண்டு செல்வதைத் தடுக்கும் பணிகளை தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்டு வருகின்றனா். அவா்கள், இதுவரை ரூ.296.40 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.
ரொக்கமாக ரூ.61.98 கோடியும், ரூ.27.51 கோடி மதிப்பில் இலவசப் பொருள்களும், ரூ.197.35 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தவிர, ரூ.8.39 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.1.17 கோடி மதிப்புள்ள மதுப் புட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: ரூ.462 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்- தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

வாக்களிப்பதன் அவசியம்: 23,500 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் - தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

பிரசார நடவடிக்கைகள்: நேரத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்: தலைமைத் தோ்தல் அதிகாரி

தமிழகத்தில் ரூ.42.65 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்: தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

