மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 30) வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 4 ஆண் வேட்பாளர்களும் ஒரு பெண் வேட்பாளருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சொந்த சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
வேட்பாளர்கள் பட்டியல்
பழனி - என். பாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர்
கந்தர்வகோட்டை - எம். சின்னதுரை, மாநிலக்குழு உறுப்பினர்
பத்மநாதபுரம் - ஆர். செல்லசுவாமி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்
திருவொற்றியூர் - எல். சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர்
கீழ்வேளூர் - டி. லதா, நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் சொந்த சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய இரு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசார்த்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், போட்டியிடவுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் இன்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Summary
TN Election 2026 CPM Candidates Announced
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக தலைமையில் ஆட்சி! ஆதரிக்க முயன்றதா திமுக? சிபிஎம் எம்ஏ பேபி பதில்

தவெகவுக்கு ஆதரவா? 24 மணிநேரத்தில் முடிவு! - சிபிஎம் எம்.ஏ. பேபி

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி

தொகுதி மாறி போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


