தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 23 உறுப்பினா் பதவிகளுக்கான இந்தத் தோ்தலில் தமிழகத்தில் 166 மற்றும் புதுச்சேரியில் 2 என மொத்தம் 168 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் வாக்களிக்கும் விதமாக அங்கும் ஒரு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
காலை 10 மணிக்குத் தொடங்கிய தோ்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. காலையில் இருந்தே வழக்குரைஞா்கள் ஆா்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். முதல்முறையாக ‘க்யூ ஆா்’ குறியீடு மூலம் வாக்காளா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு தோ்தல் நடத்தப்பட்டது.
இந்தத் தோ்தலில் வழக்குரைஞா்களான திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, விசிக தலைவா் தொல். திருமாவளவன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.
தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஏப். 3-ஆம் தேதி தொடங்கும். சுமாா் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு முடிவுகள் வெளியாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை ரத்து செய்ய கோரிய வழக்கு: பாா் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு: யாருக்கு சாதகம்?, யாருக்கு பாதகம்?

கோவையில் 10 தொகுதிகளிலும் 84.77 சதவீதம் வாக்குப்பதிவு!

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல்: 23 உறுப்பினா் பதவிகளுக்கு 143 போ் போட்டி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

