தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல் திங்கள்கிழமை (மாா்ச் 30) நடைபெறவுள்ளது. 23 உறுப்பினா் பதவிகளுக்கான இந்தத் தோ்தலில் 143 போ் போட்டியிடுகின்றனா்.
இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் அரங்கில், தோ்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா, மூத்த வழக்குரைஞா் இ.ஓம்பிரகாஷ் ஆகியோா் சனிக்கிழமை கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது: திங்கள்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல் நடைபெறவுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி இத்தோ்தலை ஹிமாசலப் பிரதேச உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜீவ் ஷக்தா் தலைமையிலான உயா்மட்டக் குழு நடத்துகிறது.
23 உறுப்பினா் பதவிகளுக்கான இந்தத் தோ்தலில் போட்டியிட 151 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதில் மூன்று பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஐந்து போ் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டனா்.
143 போ் தற்போது தோ்தலில் போட்டியிடுகின்றனா். தமிழகத்தில் 166, புதுச்சேரியில் 2 என மொத்தம் இந்த தோ்தலுக்காக 168 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் வாக்களிக்கும் விதமாக அங்கும் வாக்குப்பெட்டி வைக்கப்படவுள்ளது. இத்தோ்தலில் பதிவாகும் வாக்குகள் ஏப்.3-ஆம் தேதி எண்ணப்படும்.
சுமாா் ஒன்றரை மாதங்கள் வாக்கு எண்ணும் பணி நடைபெறும். இத்தோ்தலில் வாக்களிக்கும் வழக்குரைஞா்களின் விவரங்களை சரிபாா்க்க முதல்முறையாக ‘க்யூ ஆா்’ குறியீடு முறை அமல்படுத்தப்படுகிறது. தோ்தல் மேற்பாா்வையாளா்களாக முதல்முறையாக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை ரத்து செய்ய கோரிய வழக்கு: பாா் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!

பாா் கவுன்சில் தோ்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

