தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்குப் பின் தெற்கு மாவட்டங்களில் நாளைமுதல் அஇஅதிமுக பொதுச் செயலரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரத்தை தொடங்குகிறார்.
தேர்தல் அறிவிப்புக்குப் பின் சென்னை, மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோயிலில் வழிபட்டுவிட்டு அங்கிருந்து தேர்தல் பிரசாரத்தை இந்த வாரம் தொடங்கினார் பழனிசாமி.
அதன் தொடர்ச்சியாக, சென்னை சுற்றுவட்டாரத்தில் தேர்தல் பிரசாரத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ள அவர், அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 29) முதல் அடுத்து சில நாள்களுக்கு தெற்கு மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைச் சந்திக்கிறார்.
நாளை (மார்ச் 29) கன்னியாகுமரி தொகுதிக்குச் செல்லும் அவர் அங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைசர் தளவாய் சுந்தரத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார். மேலும், தங்களுடன் கூட்டணியிலுள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, பத்மநாபபுரம் ஆகிய 4 தொகுதிகளிலும் போட்டியிடும் அக்கட்சிக்கும் அதேபோல தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிள்ளியூர் தொகுதியையும் உள்ளடக்கி நாகர்கோவிலில் அவரது நாளைய பிரசாரம் அமைய உள்ளது.
மறுநாளான மார்ச் 30-இல், அவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலிம் அதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் பிரசாரம். மார்ச் 31-இல், விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலும் பிரசாரம். ஏப். 1-இல், சிவகங்கை, புதுக்கோட்டையில் முதல்கட்ட பிரசாரத்தை அவர் நிறைவு செய்கிறார்.
Summary
Edappadi K. Palaniswamy will start his election campaign in south TN districts starting from tomorrow (March 29)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விறு, விறுப்பாக நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரம்

திருவாரூரில் தோ்தல் பிரசாரத்தை தவிா்த்த திமுக கூட்டணி!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!

இபிஎஸ்ஸின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம்! சேலத்தில் நிறைவு செய்கிறார்!!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

