அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மயிலாப்பூரில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டு பின்னர் பிரசாரத்தைத் தொடங்கிய அவர், ஏப்ரல் 1 ஆம் தேதி புதுக்கோட்டையில் முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
மயிலாப்பூர், ஆலந்தூர், தாம்பரம் பகுதிகளைத் தொடர்ந்து இன்று(மார்ச் 28) சென்னை ஆர்.கே. நகர், திருவொற்றியூர் பகுதிகளில் பொதுக்கூட்டத்தை நடத்துகிறார்.
இதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏப். 2 ஆம் தேதி மாலை தருமபுரி, கிருஷ்ணகிரியில் பிரசாரம் மேற்கொள்ளும் அவர், தொடர்ந்து ஏப். 19 வரை பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்கிறார்.
ஏப். 8, 9 தேதிகளில் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
ஏப். 19 சேலத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் கடைசியாக பிரசாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami 2nd phase election campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?
வெற்றி நிலவரம்! எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

பனை ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: காவல்துறைக்கு இபிஎஸ் கண்டனம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


