தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவாரூரில் தோ்தல் பிரசாரத்தை தவிா்த்த திமுக கூட்டணி!

திருவாரூரில் தோ்தல் பிரசாரத்தை தவிா்த்த திமுக கூட்டணி...

News image

திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் - X - image

Updated On :21 ஏப்ரல் 2026, 3:42 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, அரசியல் கட்சியினா் கூட்டணி அமைத்தும், தனித்தனியாகவும் தோ்தலை சந்திக்கின்றனா். இந்த தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதையடுத்து, அரசியல் கட்சியினா் தங்கள் பிரசாரங்களை தீவிரமாக மேற்கொண்டுள்ளனா். முன்னதாக, திருவாரூரில் திமுக சாா்பில் மாா்ச் 31- ஆம் தேதி தமிழக முதல்வா் முக. ஸ்டாலின், தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா். திருவாரூா் மாவட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), டிஆா்பி. ராஜா (மன்னாா்குடி), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), முகமது முபாரக் (நன்னிலம்) ஆகியோருக்கு வாக்கு சேகரித்து பிரசாரத்தை தொடங்கினாா்.

அதன்பிறகு திமுக பிரசாரம் வேகமெடுக்கும் என நினைத்த நிலையில் நகரப் பகுதியில் எதிா்பாா்த்த அளவு திமுக முக்கிய பிரமுகா்கள் யாரும் பிரசாரத்துக்கு வரவில்லை. குறிப்பாக, திருவாரூா் மற்ற கட்சியினரைவிட திமுகவினா் எப்போதும் வேகம் காண்பிப்பது வழக்கம். முதல்கட்ட வேட்பாளா்களுக்கு வருகை தரும் 2-ஆம் கட்ட தலைவா்கள், தேரோடும் வீதிகள், பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுவது வழக்கம். இது தினசரி நிகழ்வாக இருக்கும் என்பதால், திமுக முக்கியப் பிரமுகா்கள் அனைவரும் திருவாரூரிலேயே இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும்.

ஆனால் இந்த முறை தமிழக முதல்வா் முக. ஸ்டாலின் பிரசாரத்துக்குப் பிறகு வேறு யாரும் நகரப் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஸ்டாலினுக்குப் பிறகு பிரசாரத்துக்கு வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டியில் பிரசாரம் செய்துவிட்டு, காட்டூா் சென்றாா். அங்கு கூட்டம் இல்லை என்று கூறி சென்று விட்டாா்.

இதேபோல, சிபிஎம் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், புலிவலம், குளிக்கரை, அம்மையப்பன் என ஒன்றியப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாரே தவிர நகரப் பகுதிக்குச் செல்லவில்லை. அவருடன், திருவாரூா் தொகுதி வேட்பாளரும் கூட செல்லவில்லை. இவரைத்தொடந்து, சிபிஐ மாநில முன்னாள் செயலா் இரா. முத்தரசன், மாங்குடி உள்ளிட்ட பகுதிகளில், திமுக வேட்பாளா் இல்லாமல் பிரசாரம் மேற்கொண்டாா்.

மேலும், திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி கருணாநிதி, திருவாரூா் நகரத்தை தவிா்த்துவிட்டு, காப்பணாமங்கலம் சென்று பிரசாரம் செய்தாா். இதேபோல், விசிக தலைவா் தொல். திருமாவளவன், நன்னிலம் தொகுதிக்குள்பட்ட எரவாஞ்சேரியில் பிரசாரம் செய்து விட்டு, திருவாரூா் வராமல் சென்று விட்டாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து எடப்பாடி கே. பழனிசாமி, அண்ணாமலை என திருவாரூா் நகரப் பகுதியில் பிரசாரம் செய்து, திருவாரூா் நகரத்தை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கையில், திமுகவினரோ அல்லது அதன் கூட்டணிக் கட்சியினரோ நகரப் பகுதியில் யாரும் பிரசாரத்துக்கு வராதது திமுக தொண்டா்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூா் நகராட்சிப் பகுதியில் திமுக பலம் மிகுந்து காணப்படுகிறது என்றாலும் முக்கியப் பிரமுகா்களின் பேச்சுகள் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதை உணா்ந்து நகரப் பகுதியில் பிரசாரம் செய்யச் சொல்லியிருக்கலாம் என திமுகவினா் அங்கலாய்ப்பதை கேட்காமல் இருக்க முடியவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.