/

பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார்யார்?

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது...

News image

உதய சூரியன் (திமுக சின்னம்) | தாமரை (பாஜக சின்னம்)

Updated On :28 மார்ச் 2026, 5:46 pm IST

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் மொத்தம் 18 தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாஜகவை எதிர்த்து மொத்தம் 18 பேர் களம் காணுகின்றனர்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளான, மயிலாப்பூர், அவிநாசி, கோவை (வடக்கு), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை (மேற்கு), சாத்தூர், திருச்செந்தூர், ராதாபுரம், நாகர்கோவில், வாசுதேவநல்லூர், ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், மானாமதுரை, ராமநாதபுரம், ராசிபுரம் ஆகிய இடங்களில் திமுகவிலிருந்து,

  1. மயிலாப்பூர் - தா. வேலு

  2. அவிநாசி - டாக்டர் கோகிலா மணி

  3. கோவை (வடக்கு) - செந்தமிழ்செல்வன்

  4. புதுக்கோட்டை - டாக்டர் வை. முத்துராஜா

  5. திருப்பத்தூர் - கே. ஆர். பெரியகருப்பன்

  6. மதுரை (மேற்கு) - ரகு. பாலாஜி

  7. சாத்தூர் - அ. கடற்கரை ராஜ்

  8. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்

  9. ராதாபுரம் - மு. அப்பாவு

  10. நாகர்கோவில் - எஸ். ஆஸ்டின்

  11. வாசுதேவநல்லூர் - ஈ. ராஜா

  12. ஆவடி - சா. மு. நாசர்

  13. திருவண்ணாமலை - எ. வ. வேலு

  14. தஞ்சாவூர் - சண். ராமநாதன்

  15. திருவாரூர் - பூண்டி. கே. கலைவாணன்

  16. மானாமதுரை - ஆ. தமிழரசி ரவிக்குமார்

  17. ராமநாதபுரம் - காதர்பாட்சா

  18. ராசிபுரம் - டாக்டர் மா. மதிவேந்தன் ஆகியோர் திமுகவிலிருந்து வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

பாஜக போட்டியிடும்,

  1. தளி

  2. மொடக்குறிச்சி

  3. ஊட்டி

  4. திருப்பூர் (மேற்கு)

  5. கந்தர்வக்கோட்டை

  6. விளவங்கோடு

  7. அறந்தாங்கி

  8. குளச்சல்

  9. பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுகவுடன் அங்கம்வகிக்கும் தோழமை கட்சிகளிலிருந்து வேட்பாளர்கள் பாஜகவை நேரடியாக எதிர்த்து களம் காணுகின்றனர்.

Summary

DMK candidates vs. BJP in TamilNadu 2026 election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.