294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஏறத்தாழ 225 இடங்களைக் கைப்பற்றி, தமது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி சனிக்கிழமை (ஏப்.25) தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்ட நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23-இல் நடைபெற்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29-இல் நடைபெற உள்ளது. கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது. இதனையடுத்து, அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பிலும் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஹௌரா மாவட்டம் பாலியில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அபிஷேக் பானர்ஜி, “முதல் கட்டத்தில் நூறு ரன்களைக் கடந்துவிட்டோம். இரண்டாம் கட்டத்தில் இரட்டைச் சதம் அடிப்போம். குறைந்தது 225 இடங்களில் நாம் வெற்றி பெறுவோம்.
நாங்கள் இங்கு நான்காவது முறையாக ஆட்சி அமைப்போம். அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் தில்லியிலிருந்து பாஜகவை வேரோடு பிடுங்கி எறிவோம்.
மோடி நடந்து சென்ற சாலையும், அவர் நின்று தெருவோரக் கடையில் 'ஜால்முரி' என்ற உணவை ரசித்த நடைபாதையும் மமதா பானர்ஜி அரசால் கட்டப்பட்டவை. அந்தக் கடைக்காரர் பிகாரின் கயாவைச் சேர்ந்தவர்.
பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு இவ்வளவு வேலைவாய்ப்பை உருவாக்கியிருந்தும், பிகாரைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஏன் ஜார்கிராமில் ஜால்முரி விற்கிறான்? பிகாரில் வேலைவாய்ப்பு எங்கே போனது?” எனத் தெரிவித்தார்.
Summary
Trinamool Congress National General Secretary Abhishek Banerjee stated on Saturday (April 25) that his party would return to power by securing approximately 225 seats in the 294-member West Bengal Legislative Assembly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் பதற்றம்! அபிஷேக் பானர்ஜியின் வீட்டுக்கு வழங்கிய பாதுகாப்பு வாபஸ்!
அவர் சிங்கம் என்றால் நான் புஷ்பா: ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் போராட்டம்!

மேற்கு வங்கத்தை சிதைத்து அடையாளத்தை மாற்ற நினைக்கும் பாஜக! திரிணமூல்
திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

