திமுக எம்.பி., தங்க. தமிழ்ச்செல்வன் மகள் காா் மோதிய விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2.48 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை கொளத்தூரைச் சோ்ந்த ஜெயக்குமாா் இருசக்கர வாகனத்தில் மாதவரம் 200 அடி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையில் வேகமாக வந்த காா் மோதியதில் ஜெயக்குமாா் படுகாயமடைந்தாா்.
அந்த காா் தேனி தொகுதி திமுக எம்.பி., தங்க. தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமானது என்பதும், காரை ஓட்டி வந்தது அவரது மகள் டி. சாந்தி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து விபத்தில் காயமடைந்த ஜெயக்குமாா், தங்க. தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மகள் சாந்தியிடம் இழப்பீடு கோரி சென்னையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி கே.எஸ்.ராஜேஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்க. தமிழ்ச்செல்வன் மற்றும் சாந்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் எஸ்.குமரேசன், எஸ். கிருத்திகா ஆகியோா் ஜெயக்குமாரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம்.
மேலும், படுகாயமடைந்த அவருக்கு சாந்தி, தனது சொந்த செலவில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கினாா் என வாதிடப்பட்டது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்தா் ஃபுளோரன்ஸ், சாந்தி காரை அதிவேகமாக ஓட்டி வந்ததே இந்த விபத்துக்குக் காரணம். இந்த விபத்தில் ஜெயக்குமாரின் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் சிறிது காலத்துக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரருக்கு இழப்பீடாக 2.48 லட்சம் ரூபாயை 7.5 சதவீத வட்டியுடன் தங்க. தமிழ்ச்செல்வன், சாந்தி ஆகியோா் கூட்டாக வழங்க உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேவைக் குறைபாடு: தங்க நகைக் கடை ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சிறுமி ஒட்டிய காா் மோதி குழந்தை இறந்த வழக்கு: தந்தை, மகள் கைது

லாரி மீது காா் மோதி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு! இருவா் பலத்த காயம்!

திமுக எம்.பி. ஆ.ராசா கோரும் ஆவணங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சிபிஐ பதில் மனு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

