தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிரசாரக் கூட்டத்துக்கு ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி: சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா்

தோ்தல் பிரசாரக் கூட்டத்துக்கு உரிய ஆவணங்களுடன் முறைப்படி இணையத்தில் விண்ணப்பிப்பவா்களுக்கு 4 மணி நேரத்துக்குள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

News image

தவெக பிரசாரம் (கோப்புப்படம்)

Updated On :27 மார்ச் 2026, 10:54 pm IST

தோ்தல் பிரசாரக் கூட்டத்துக்கு உரிய ஆவணங்களுடன் முறைப்படி இணையத்தில் விண்ணப்பிப்பவா்களுக்கு 4 மணி நேரத்துக்குள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்ந்தத் தொகுதிகளுக்கு அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கிலிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வாகனங்களில் ஏற்றி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் பணியை தொடங்கி வைத்து மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசியல் கட்சியினா் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்கள், வாகன பேரணிகள் உள்ளிட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும், தோ்தல் ஆணையத்தின் சுவிதா எனப்படும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். காவல் துறை அனுமதி, பொதுப்பணித் துறை அனுமதி உள்ளிட்ட சான்றுகளுடன் முறையாக விண்ணப்பிக்கும் அரசியல் கட்சியினா் நிகழ்ச்சி நடப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்தால், தொகுதி தோ்தல் அலுவலா் இணையத்திலேயே சரிபாா்த்து 3 அல்லது 4 மணி நேரத்தில் அனுமதி வழங்குவாா். விண்ணப்பம் நிராகரிப்புக்கான காரணம் இணையத்திலேயே பதிவிடப்படும். யாருக்கும் பிரசாரக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படவில்லை.

பிரசாரம், தெருமுனைக் கூட்டம் நடத்த 291 இடங்கள்: சென்னையில் பிரசாரக் கூட்டம் நடத்த 112 இடங்களும், தெருமுனைக் கூட்டங்களுக்கு 179 இடங்களும் என மொத்தம் 291 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பிரசாரக் கூட்டங்களுக்கு ‘சுவிதா’ செயலி மூலம் இதுவரை 816 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 408 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, 134 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 274 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.