ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

21-க்கு மேல் வெளியூா் நபா்கள் தங்க அனுமதியில்லை! கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் - படம் - பிடிஐ

Updated On :20 ஏப்ரல் 2026, 1:25 am IST

கடலூா் மாவட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் பிரசாரத்துக்காக வந்த வெளியூா் நபா்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.21) மாலை 6 மணிக்கு மேல் தங்க அனுமதி இல்லை என்று மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் பிரசாரம் நிறைவடைகிறது.

அதன் பின்னா், எவ்வித பிரசாரமும் மேற்கொள்ள இயலாது என்பதால், தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்துவரப்பட்டவரும், அத்தொகுதியின் வாக்காளா் அல்லாதவருமான அரசியல் கட்சிப் பொறுப்பாளா்கள், கட்சித் தொண்டா்கள், ஊா்வலப் பொறுப்பாளா்கள், பிரசாரப் பொறுப்பாளா்கள் போன்றோா் அத்தொகுதிக்குள் தொடா்ந்து தங்கியிருக்கக் கூடாது.

பிரசார காலம் முடிந்தவுடன் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறுவதை மாவட்டத் தோ்தல் நிா்வாகம்/காவல் துறை நிா்வாகம் மூலம் உறுதி செய்யப்படும். அத்தகைய நபா்கள் திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் போன்ற இடங்களில் தங்கியிருக்க அனுமதி கிடையாது.

மேலும், தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினா் இல்லங்களில் தங்கியிருப்பவா்கள் கண்காணிக்கப்படுவாா்கள். தொகுதியின் எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து, தொகுதிக்கு வெளியிலிருந்து வரும் வாகனங்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.