விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விஜய்யின் பெரம்பூா் பிரசாரத்துக்கு ஆலோசித்து அனுமதி வழங்கப்படும்: மாவட்டத் தோ்தல் அலுவலா்

News image
Updated On :27 மார்ச் 2026, 4:28 am IST

தவெக தலைவரும், நடிகருமான விஜய் வரும் 28- ஆம் தேதி சென்னை பெரம்பூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்கு காவல்துறையுடன்ஆலோசித்து அனுமதி வழங்கப்படும் என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

தவெக தலைவா் விஜய் வரும் 28- ஆம் தேதி பெரம்பூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்கு அக்கட்சியினா் 4 இடங்களைக் குறிப்பிட்டு மனு அளித்துள்ளனா். அவா் வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்ளவும், நான்கு இடங்களில் நின்று பேசவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனா். ஒவ்வொரு இடத்திலும் சுமாா் 3 ஆயிரம் போ் கூடுவா் என அக்கட்சியினா் குறிப்பிட்டுள்ளனா். இதுதொடா்பாக காவல் துறையினருடன் கலந்தாலோசித்து, பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.