திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய 27 கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
கடலூர் தொகுதியில் நாளை பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கியிருந்த நிலையில், சாலைவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், விஜய் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலூர் பிரசாரம் அனுமதி பெற்று இரண்டு முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை மதியம் 2.00 மணியளவில் திருச்சிக்கு வருகிறார்.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிலையம், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்தவெளிவாகனத்தில் நின்றபடியே பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
மேலும், விமானநிலையம், வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கோழிப்பண்ணை சாலை, கொட்டப்பட்டு, விமான நிலையம் வரை சாலையில் வலம் வருகிறார்.
தவெக தலைவர் விஜய் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய முறைப்படி தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை 27 கட்டுப்பாடுகளுடன் மாநகர காவல் துறையினர் வழங்கியுள்ளனர்.
Summary
Regarding permission being granted for Vijay's campaign in Trichy East constituency tomorrow..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கில் விஜய் இன்று பிரசாரம்!

திருச்சி கிழக்கில் நாளை விஜய் பிரசாரம்: 27 கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதி!

திருச்சியில் தவெக தலைவா் விஜய்யின் இன்றைய பிரசாரம் ரத்து

தவெக தலைவா் விஜய் இன்று வேட்புனு தாக்கல்: மரக்கடையில் பிரசாரத்துக்கு அனுமதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


