அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை? என்பது குறித்த அறிவிப்புகளை அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான வேலைகளை ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தீவிரப்படுத்தி வருகின்றன.
மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தேர்தல் களத்தில் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள அதிமுக தரப்பில் இதுவரை கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளில், அமமுக 11 தொகுதிகளில், தமாகா 5 தொகுதிகளில், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி இரண்டு தொகுதிகளிலும், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய பாரதம் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடவுள்ளன. மீதமுள்ள 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 25) காலை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கட்சியாக போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை அறிவித்துள்ளார். அதன்படி, பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான விவரங்கள் அறிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்
• மயிலாப்பூர்
• ராசிபுரம் (தனி)
• மொடக்குறிச்சி
• தளி
• ராமநாதபுரம்
• மானாமதுரை (தனி)
• உதகை
• குளச்சல்
• அவினாசி பத்மநாபபுரம்
• திருப்பூர் தெற்கு
• கோவை வடக்கு
• கந்தர்வகோட்டை
• புதுக்கோட்டை
• திருப்பத்தூர் (மதுரை மாவட்டம்)
• மதுரை தெற்கு
• சாத்தூர்
• திருச்செந்தூர்
• வாசுதேவநல்லூர் (தனி)
• ராதாபுரம்
• நாகர்கோயில்
• விளவங்கோடு
• ஆவடி
• திருவண்ணாமலை
• தஞ்சாவூர்
• திருவாரூர்
• அறந்தாங்கி
Summary
Edappadi Palaniswami issued announcements regarding which constituencies were allotted to the BJP within the AIADMK alliance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னை திரும்பும் அதிமுக எம்எல்ஏக்கள்! அடுத்த நகர்வு என்ன?

புதுவை செல்கிறார் இபிஎஸ்! அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த திட்டம்!

தவெகவுக்கு ஆதரவா? அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் ஆலோசனை!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


