தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதுக்கோட்டையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை!

ரமலான் நிறைவு நாளையொட்டி, புதுக்கோட்டையில் ஈத் அல் பித்ர் எனப்படும் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை - DNS

Updated On :21 மார்ச் 2026, 9:31 am IST

இஸ்லாமியர்களின் புனிதமாகக் கருதப்படும் ரமலான் நிறைவு நாளையொட்டி 'ஈத் அல் பித்ர்' எனப்படும் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை புதுக்கோட்டையில் சனிக்கிழமை (மார்ச் 21) காலை நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மாத தீவிர நோன்புக்குப் பிறகு, நோன்பை நிறைவு செய்து ஈகைப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை

ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை - DNS

தொழுகை முடிந்து, ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்களின் அன்பையும் வாழ்த்தையும் பகிர்ந்து கொண்டனர்.

இஸ்லாமியர்களின் வீடுகளிலும் சிறப்பு உணவுகளும், இனிப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைவரும் புத்தாடை அணிந்து புனித ரமலானைக் கொண்டாடினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், புதுக்கோட்டை நகர கிளைகள் 1, 2, ஆலங்குடி, கறம்பக்குடி, முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல் , மேலத்தானியம், அறந்தாங்கி, வெட்டிவயல், ரெத்தினகோட்டை, ராஜேந்திரபுரம், கோட்டைபட்டினம், வடக்கு அம்மாபட்டினம் 1,2, ஜெகதாப்பட்டினம், கோபாலபட்டினம், ஆர். புதுப்பட்டினம், முத்துகுடா, கிருஷ்ணாஜிபட்டினம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, காசிம்புதுப்பேட்டை, பிஆர் பட்டினம், கட்டுமாவடி ஆகிய கிளைகள் சார்பாக 28 இடங்களில் ஈகைத் திருநாள் தொழுகை தவ்ஹீத் திடல்களில் நடைபெற்றது.

இந்த சிறப்புத்தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் கலந்து கொண்டனர்.

Summary

Special Eid Mubarak prayers in Pudukkottai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.