ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் 1033 பேர் போட்டியிட்டது தேசிய அளவில் தேர்தல் சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் கொண்டுவர காரணமாக அமைந்தது.
கடந்த 1996 சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மொடக்குறிச்சி தொகுதியில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாய சங்கங்களின் சார்பில் 1000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கினர். திமுக, அதிமுக சார்பிலும் வேட்பாளர்கள் களம் கண்டனர். மொத்தம் 1,033 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தேர்தல் ஆணையம் திகைத்துப் போய் அந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைத்தது.
மொடக்குறிச்சி தொகுதியில் தேர்தலுக்கு மட்டுமே சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, 1,033 வேட்பாளர்களின் பெயர்களை உள்ளடக்கிய 120 பக்கம்கொண்ட வாக்குப் பதிவு புத்தகம் அச்சடிக்கப்பட்டது. வாக்காளர் ஒவ்வொருவருக்கும் வாக்குப் பதிவு அன்று ஒரு வாக்குப் பதிவு புத்தகம் கொடுக்கப்பட்டது. அதில் வாக்காளர்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்கள் எந்தப் பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தேடிக் கண்டறிந்து வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 1,033 வேட்பாளர்களில் 1,030 பேர் வைப்புத்தொகையை இழந்தனர். 88 பேர் ஒரு வாக்குகூட வாங்கவில்லை. 158 பேர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றனர். திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் 64,436 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்திய அளவில் இந்தத் தேர்தல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றால், போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க முடியாமல், தேர்தல் ஆணையம் திணறியது.
இதன்பிறகே, அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதை தவிர்க்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. குறிப்பாக, வேட்பாளர்களின் வைப்புத்தொகையை அதிகப்படுத்தியது. மேலும் தேர்தலில் போட்டியிடுபவர்களை அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது. நாடுதழுவிய அளவில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவர முக்கியக் காரணமாக மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் அமைந்தது.
Summary
Modakurichi constituency that paved the way for electoral reform!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பூர் தொகுதி: முதல்வர் விஜய்க்கு எதிராக 3 பேர் தேர்தல் வழக்கு

அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்

மை அழிவதற்குள் 5 தொகுதிகள் காலி! ஒரு தொகுதியில் தேர்தல் நடத்த ஆன செலவு எவ்வளவு?
வெற்றி நிலவரம்! எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

