புதுவையில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை இன்று(மார்ச் 21) அறிவித்துள்ளது.
புதுவையில் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 23 கடைசி நாளாகும்.
புதுவையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன.
அதேநேரத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி நேற்று உறுதியாகியுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி, புதுவை பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியாவை நேற்று சந்தித்துப் பேசிய நிலையில் கூட்டணி உறுதியானது.
இந்த கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக 14 இடங்களிலும் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சி தலா 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
பாஜக 10 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மண்ணடிப்பேட்டை தொகுதியில் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
முதலியார்பேட்டை - ஜான் குமார்
காலாப்பேட்டை - கல்யாணசுந்தரம்
ராஜ் பவன் - விபி ராமலிங்கம்
ஊசுடு(தனி) - தீப்பைந்தன்
மணவெளி - ஆர். செல்வம்
திருநள்ளாறு - ராஜசேகரன்
நிரவி டி.ஆர். பட்டினம் - மீனாட்சிசுந்தரம்
மாஹே - தினேஷன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Summary
first list of BJP candidates released in Puducherry
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுவையில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி!

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!

புதுவையில் ஆட்சியைத் தக்கவைக்கிறதா என்.ஆர். காங்கிரஸ்? கருத்துக் கணிப்பு!

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது! தொகுதிப் பங்கீடு விவரம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு



