ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கூட்டணி உறுதியாகுமா? புதுவையில் திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சு!

புதுவையில் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை பற்றி...

News image

புதுவை திமுக - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் - ENS

Updated On :21 மார்ச் 2026, 1:16 pm IST

புதுவையில் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் புதுவையில் இழுபறி நீடித்து வருகிறது.

கூட்டணி முடிவாகாததால் திமுக, காங்கிரஸ் இரு கட்சிகளும் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. மார்ச் 23 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

புதுவையில்காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறிவரும் நிலையில் முடிவு எட்டப்படாமல் உள்ளது.

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுவதாக தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே என். ஆர். காங்கிரஸ் - பாஜக இடையே கூட்டணி இழுபறி நீடித்த வந்த நிலையில் கூட்டணி உறுதியாகியுள்ளது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Final talks between DMK and Congress in Puducherry election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.