தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று(மார்ச் 18) மாலை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இது குறித்து தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
இஸ்லாமியச் சொந்தங்களின் புனிதத் திருநாளான ரமலான் திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தவெக தலைவர் கலந்துகொள்ளும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, இன்று (18.03.2026, புதன்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி, தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று, உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. மேலும் 1000 பேர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
இவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை.
அழைப்பிதழ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அழைப்பிதழ் பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Summary
Tamil Nadu Victory Party leader Vijay will participate in the Iftar fasting event to be held on behalf of the party.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இணைத்துக்கொள்வது சரியா? - இயக்குநர் சேரன் கேள்வி!

விஜய் உயிருக்கு ஆபத்தா? காங்கிரஸ் புகார்

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு! விஜய் பங்கேற்பு!

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


