சென்னை மாதவரத்தில் ரௌடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சென்னை மாதவரம் அருகே மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள பழைய கட்டடத்தில் பட்டாகத்தியுடன் ஒருவர் பதுங்கி இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் மூலம் காவல் துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாதவரம் போலீஸார் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் மஞ்சம்பாக்கத்தில் உள்ள பழைய கட்டடத்தை சுற்றிவளைத்தனர்.
பிறகுதான் உள்ளே பதுங்கியிருந்த கொலையாளி கணேசன் என்ற தொப்பை கணேசன் என போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க முன்றனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி, காவலரான தினேஷ் ஆகிய இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
இந்த நிலையில் போலீஸார் தற்காப்புக்கு ரௌடி தொப்பை கணேசனை என்கவுன்டர் செய்தனர். இதைத்தொடர்ந்து தொப்பை கணேசனின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த இரு போலீஸாரையும் அதே ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னையில் பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான கணேசன் (எ) தொப்பை கணேசன் மீது சென்னையில் மட்டுமே சுமார் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் மீது 3 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள், 2 கொள்ளை வழக்குகள், 8 கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன.
தொப்பை கணேசன் யாரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்ட முற்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Rowdy Thoppai Ganesh was shot dead in a police encounter in Madhavaram, Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி ரௌடி கொலை வழக்கு: 6 போ் கைது

கடலூர் அருகே ரௌடி கொலை: போலீஸார் விசாரணை

என்கவுன்ட்டரில் ரௌடி உயிரிழந்த வழக்கு: நீதித்துறை நடுவா் விசாரணை

போலீஸாா் துப்பாக்கியால் சுட்டதில் ரௌடி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


