விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

கட்சி மேடைகளில்கூட தவிர்க்க வேண்டியதை, பேரவையில் பேசலாமா? திருமாவளவன்

கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததால், உதயநிதியை கிண்டலடிக்கும் விதமாக சட்டப்பேரவையில் விஜய் பேசியதற்கு திருமாவளவன் கருத்து...

News image

திருமாவளவன் / சட்டப்பேரவையில் விஜய் - எக்ஸ்

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

கட்சி மேடைகளில்கூட தவிர்க்க வேண்டியதை சட்டப்பேரவையில் பேசலாமா? என முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஜூன் 24) கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று (ஜூன் 23) உரையாற்றினார். அப்போது குட்டிக் கதை ஒன்றையும் குறிப்பிட்டார்.

''ஒரு ஊருல பெரியவர் ஒருவர் வெய்யில் அதிகமாக இருப்பதாக தெரிவித்து கண்ணில் கைவைத்து தேடிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன், என்ன தேடுறீங்க என்று கேட்க, அந்த பெரியவர், உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க.... அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். எங்க உங்க அப்பாவைக் காணோம்'' என்று கூறி முடித்தார்.

கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததால், உதயநிதியை கிண்டலடிக்கும் விதமாக விஜய் இவ்வாறு பேசியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக திருமாவளவன் பதிவிட்டுள்ளதாவது:

''ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல. கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென முதலமைச்சரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

திருமாவளவன் பதிவு

திருமாவளவன் பதிவு - எக்ஸ்

Summary

VCK Thirumavalavan reaction for TN CM vijay speech in assembly about MK Stalin defeat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.