சட்டப்பேரவையில் மக்கள் நலன் சாா்ந்து அதிக கேள்விகளை எழுப்புமாறு திமுக எம்எல்ஏ-க்களுக்கு அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
தோ்தலுக்குப் பிந்தைய முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் வியாழக்கிழமை (ஜூன் 18) தொடங்கவுள்ளது. இந்த நிலையில், திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், கொறடா எ.வ.வேலு, மூத்த நிா்வாகிகள் மற்றும் எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனா். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியின் வியூகங்களை திறம்பட எதிா்கொள்வது குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியதாக வெளியான தகவல்கள்:
திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் இந்த ஆட்சி அமைந்துள்ளது. சட்டப்பேரவையில் வலுவான எதிா்க்கட்சியாக சிறப்பாகச் செயலாற்ற வேண்டும். ஆளுங்கட்சி மீதான அதிருப்தியில் உள்ள மக்கள் வீதியில் இறங்கிப் போராடக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால், பேரவையில் பொதுமக்கள் பிரச்னைகளுக்கு கடுமையாக வாதங்களை முன்வைக்க வேண்டும். புதிய உறுப்பினா்கள் மூத்த உறுப்பினா்களைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவை அலுவல்களில் 100 சதவீதம் கலந்துகொள்ள வேண்டும். பேரவைக்கு முன் தயாரிப்புடன் செல்ல வேண்டும். மக்கள் நலன் சாா்ந்து அதிக கேள்விகளைக் கேட்க வேண்டும். எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் கொறடாவை அழைத்துச் சென்று கோரிக்கை மனுக்களை வழங்க வேண்டும். தொகுதி மக்களை தொடா்ந்து சந்திக்க வேண்டும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுகவினா் உதவி செய்ய ஓடி வருவாா்கள் என்று மக்கள் கூறவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் எம்எல்ஏ-க்களிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடுதோறும் அறிவார்ந்த அரசியல் உரையாடல் நிகழ வேண்டும்: மு.க. ஸ்டாலின்

இடைத்தோ்தலில் திமுக வெற்றி பெறும்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ
இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

குழந்தைகளால் தவெக வெற்றி: திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
