முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

50 கத்திக்குத்து காயங்கள், 3 கொலைகள்! குடும்பத்தையே கொன்ற பெண்! அதிரும் காரணம்

தன்னுடைய பெற்றோர், சகோதரி என ஒட்டுமொத்தக் குடும்பத்தை கொன்ற பெண் மற்றும் கொலைக்கான பின்னணி

News image

பெங்களூர் கொலை

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கர்நாடக மாநிலம் பெங்களூரில் தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரியை படுகொலை செய்துவிட்டு, 24 வயது ஐடி ஊழியரும், அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த இளைஞரும் தப்பியோடிய சம்பவம் அக்கம் பக்கத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

ஆண் நண்பர் கென்னத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததை மறைத்து வைத்திருந்த ஸ்வேதா, வங்கியில் கடன் வாங்கியிருந்ததாகவும், அது கிட்டத்தட்ட ரூ.30 லட்சத்துக்கு மேல் எட்டிய நிலையில், அதனை பெற்றோர் கண்டித்ததால் இந்த படுகொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலையாளிகள் ஸ்வேதா, கென்னத் இருவரும் பொறியியல் பட்டதாரகிள், ஒன்றாகப் படித்தவர்கள் என்பதும் இவர்களது நட்பு காதலாகி மாறி ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஸ்வேதா தந்தை சோம சுந்தர் (52), மனைவி முத்து லட்சுமி (48), மகள் சுப்ரியா (19) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்கள்.

மரதஹள்ளி பகுதியில் இவர்களது பெற்றோர் வசித்து வந்த நிலையில், இவர்கள் வீட்டுக்கு பல வங்கிக் கடன் நோட்டீஸ்கள் வந்து கொண்டே இருந்திருக்கிறது. இதுவே பெற்றோருக்கும் மகளுக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது.

கஸ்தூரி நகர் முக்கிய சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஸ்வேதா வசித்து வந்துள்ளார். இந்த வீட்டுக்கு, கொலையானவர்கள் வந்த போது, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கொலையில் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொலைசெய்துவிட்டு தப்பியோடிய இருவரையும் காவல்துறை தேடி வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், வீட்டுக்கு கடன் நோட்டீஸ் வந்ததால் கோபம் அடைந்த முத்துலட்சுமி, ஸ்வேதா சென்றுள்ளார். அங்கு அவரை குற்றவாளிகள் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்திருக்கிறார்கள். பிறகு குற்றவாளிகள் வீட்டுக்குள்ளேயே ஒளிந்திருந்து, சுப்ரியா வந்ததும், அவளையும் குத்திக் கொலை செய்துவிட்டு, பிறகு திங்கள்கிழமை இரவு சோம சுந்தரம் வீட்டுக்கு வரும்போது, அதே ஆயுதத்தால் அவரையும் கொன்று, அங்கிருந்து தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முத்துலட்சுமி, சுப்ரியாவின் உடல்களில் கிட்டத்தட்ட 50 கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் வீட்டுக்குள்ளேயே பலியான நிலையில், சோமசுந்தரம் மட்டும் படுகாயங்களுடன் குடியிருப்பிலிருந்து வெளியே உதவிக் கேட்டுக் கொண்டே ஓடி வந்து பலியானதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்தக் கொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? சூழ்நிலை சந்தர்ப்பத்தால் நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஸ்வேதாவும் கென்னத்தும் தனியாக வசித்து வந்ததும், எங்கே இருக்கிறார்கள் என்பதையும் இரு வீட்டாருக்கும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். அண்மையில்தான் சோமசுந்தரம் ஸ்வேதாவின் முகவரியை வாங்கியிருக்கிறார்.

சிசிடிவி காட்சிகள்

ஸ்வேதாவும் கென்னத்தும் சம்பவம் நடந்ததும் அங்கிருந்து தப்பியோடியிருப்பது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது.

வீட்டின் பால்கனியிலிருந்த வெளியே குதித்து, அங்கிருந்து வாகன நிறுத்துமிடம் சென்று, வாகனத்தில் ஏறி தப்பியிருக்கிறார்கள்.

சோமசுந்தரம் இறப்பதற்கு முன்பு, ஸ்வேதா வாங்கிய கடன்கள் குறித்து கேட்டதாகவும், தற்போது தங்களுடன் வந்துவிடுமாறும், பிறகு கென்னத் உடன் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Summary

The woman who killed her entire family—including her parents and sister—and the background behind the murders.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.