செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

தவெக அரசு 40 நாள்களில் செய்தது என்ன? சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர் விஜய்!

தவெக அரசு 40 நாள்களில் செய்த சாதனை குறித்து முதல்வர் விஜய் பேசியது...

News image

முதல்வர் ஜோசப் விஜய் - TNDIPR

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் 40 நாள் சாதனைகளை சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பட்டியலிட்டு உரையாற்றினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் இன்று பதிலுரை அளித்தார்.

அப்போது திமுகவுக்கு எதிராக முதல்வர் விஜய் குற்றச்சாட்டுகள் முன்வைத்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பும் செய்தனர்.

இதனிடையே, தனது உரையைத் தொடர்ந்து முதல்வர் விஜய், கடந்த 40 நாள்களில் தவெக அரசு என்ன செய்தது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். அதனைப் பட்டியலிடுகிறேன் எனத் தெரிவித்தார்.

”பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்புப் படை, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், போதைப் பொருள் ஒழிப்புக்காக தனிப்படை, குறுவை நெல் சாகுபடி ஊக்குவிப்புக்காக ரூ. 134 கோடி சிறப்பு தொகுப்பு திட்டம்.

வழிபாட்டுத் தலம், பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் இருக்கக் கூடிய 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது, அங்கு பணியிலிருந்தவர்கள் வேறு வேலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கவனிக்கப்படாமல் இருந்த அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டன, பத்திரப்பதிவுத் துறையில் பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகையில்லா ஆவணப்பதிவு முறை திட்டமிடப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

கூட்டுறவு வங்கியில் ஏழை, எளிய மக்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய ரூ. 2,045 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் பேசி இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்ட ஜல்ஜீவன் திட்டம் 2.0 கொண்டுவரப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மைய விரிவாக்கத் திட்டம், கோவையில் மின்னணு அமைப்புகள், பொருள்கள் உற்பத்தி திட்டம், திருவள்ளூரில் கப்பல் கட்டுமானத் திட்ட விரிவாக்கத்துக்கு ஒப்பந்தம், அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மின்னணு முறையில் மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

சட்டவிரோத கல்குவாரி, கனிமங்கள் எடுத்துச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. கல்குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் லஞ்சமில்லா நிலைமையை உருவாக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். வரக்கூடிய நாள்களுக்கு பெண்களுக்கு பாதுகாப்பான, லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்” எனத் தெரிவித்தார்.

Summary

What did the TVK government achieve in 40 days? Chief Minister Vijay lists the accomplishments!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.