எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு மத்திய அரசுடன் மோதல் போக்கை நாங்கள் விரும்பவில்லை என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் இன்று பதிலுரை அளித்தார்.
அப்போது, தில்லி பயணம், ஆளுநருடன் நெருக்கம் என எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய்யின் பதிலளித்தார்.
அவர் பேசியதாவது:
”மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை ஏற்கெனவே அறிவித்துள்ளோம். தற்போது மத்திய அரசு கட்சியின் கொள்கைக்கு நேர் எதிராக நிற்பவர்கள்தான் நாம்.
அதேசமயம், எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு மத்திய அரசுடன் மோதல் போக்கை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு எப்போதும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மட்டும்தான் முக்கியம்.
அதற்காக நமது அரசியல் கொள்கையையோ, மாநில உரிமையையோ கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம். அதில், மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறோம். இனியும் இப்படிதான் இருப்போம். அதில் ஒருபோதும் மாற்றம் இருக்காது.
இந்த விஷயத்தில் திசைத் திருப்ப முயற்சிப்பவர்கள் மக்கள் மத்தியில் தோற்பது உறுதி. இதில், மக்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ, ஆதரவு இயக்கங்களுக்கோ எவ்வித சந்தேகமும் வேண்டாம்.” எனத் தெரிவித்தார்.
Summary
Do not desire a confrontational stance with the Central Government - Chief Minister Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக அரசு 40 நாள்களில் செய்தது என்ன? சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர் விஜய்!

முதல்வராக முதல் அரசு விழா! அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதல்வர் விஜய்!

முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!

மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

