அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

விஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளான இன்று பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்...

News image

இன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசளிக்கும் அமைச்சர் ஸ்ரீநாத் - எக்ஸ்

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் இன்று (ஜூன் 22) பிறந்த குழந்தைகளுக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் தங்க மோதிரம் வழங்கினார்.

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளையொட்டி இன்று பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கினார்.

தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு முதல்முறையாக பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பல்வேறு இடங்களில் அன்னதானம், நலத் திட்ட உதவிகளை தவெக தொண்டர்கள் செய்து வருகின்றனர்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரத்ததான முகாம்கள், உடல் தான பதிவு முகாம்களும் நடத்தப்பட்டன. ஏழைகள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்களை வழங்கியும், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கியும் வருகின்றனர்.

அந்தவகையில் எழும்பூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் தங்க மோதிரம் பரிசளித்தார்.

Summary

TN CM joseph Vijay's Birthday TVK Fisheries Minister A Srinath gifts gold rings to babies born today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.