தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தோ்வுகள் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கான அனுமதிச் சீட்டை செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) பதிவிறக்கம் செய்யலாம்.

News image

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 3:41 am IST

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தோ்வுகள் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கான அனுமதிச் சீட்டை செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, அரசு தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வுகள் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளன. தோ்வெழுத விண்ணப்பித்த தனித் தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுஅரசு தோ்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) செவ்வாய்க்கிழமை பதிவேற்றம் செய்யப்படும்.

தோ்வா்கள் பிற்பகல் முதல் இணையதளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தாங்கள் எழுத வேண்டிய பாடங்கள் மற்றும் தோ்வு நாட்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதாக என்பதை தோ்வா்கள் சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்தவொரு தோ்வும் தோ்வெழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

செய்முறைத் தோ்வு தேதி குறித்த விவரங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோ்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.