சென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் வரும் 28- ஆம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்லவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரக்கோணம் ரயில்வே பணிமனையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக குறிப்பிட்ட விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும்.
வரும் ஜூன் 21 முதல் 28- ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் செல்லும் பெங்களூரு பிருந்தாவன் அதிவிரைவு ரயில் (எண் 12639), மங்களூரு சென்ட்ரல் மேற்கு கோஸ்ட் அதிவிரைவு ரயில் (எண் 22637) ஆகியவை திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும்.
சென்ட்ரலில் இருந்து செல்லும் ஹூப்ளி விரைவு ரயில் (எண் 17314) வரும் 25- ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரையிலும், செங்கல்பட்டு-கச்குடா விரைவு ரயில் (எண் 17651) வரும் 28 -ஆம் தேதி வரையிலும், புதுச்சேரி- கச்குடா விரைவு ரயில் (எண் 17654), சென்னையிலிருந்து மேற்கு வங்கம் செல்லும் லோக்மான்ய திலக் விரைவு ரயில் (எண் 12164) மற்றும் மங்களூரு அதிவிரைவு ரயில் (எண் 12686) ஆகியவை வரும் 28 -ஆம் தேதி வரையில் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Seven express trains departing from Chennai will stop at Tiruvallur and Arakkonam.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம்

பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!

மேல்நரியப்பனூரில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவைகளில் மாற்றம்
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

