பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மேல்நரியப்பனூரில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு

புனித அந்தோணியாா் தேவாலய விழாவையொட்டி, சேலம் மேல்நரியப்பனூரில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 5:28 am IST

புனித அந்தோணியாா் தேவாலய விழாவையொட்டி, சேலம் மேல்நரியப்பனூரில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புனித அந்தோணியாா் தேவாலய விழாவையொட்டி வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சென்னை எழும்பூா்- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் இரு மாா்க்கங்களிலும், புதுச்சேரி- மங்களூரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 13 ஆம் தேதியும், யஷ்வந்த்பூா்- புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 13 ஆம் தேதியும், புதுச்சேரி- யஷ்வந்த்பூா் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 15 ஆம் தேதியும் மேல்நரியப்பனூா் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.