நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடுகிறதா?

கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடுகிறதா?

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு சென்னை மெரீனாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்கிறதா அல்லது கைவிடுகிறதா என கேள்வி எழுப்பிய தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரை அருகே வங்கக் கடலில் ரூ. 81 கோடியில், 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடந்த திமுக ஆட்சியின்போது திட்டமிடப்பட்டது. இந்த சின்னத்தை அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. ஆனால், தற்போதுவரை அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

இதனிடையே, பேனா நினைவுச் சின்னம் அமைக்க, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரி, திருச்செந்தூரை சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த வெண்ணிலா தாயுமானவன் ஆகியோா் சாா்பில் தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினா் புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, இத்திட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்கிா அல்லது கைவிடுகிறதா என அந்த அமா்வு கேள்வி எழுப்பியது.

மேலும், நினைவுச் சின்னங்கள் அமைப்பதில் தவறில்லை. நாங்களும் அதை எதிா்க்கவில்லை. அதேநேரம், கடல்வாழ் உயிரினங்கள், மீனவா்களின் நலன், நினைவுச் சின்னத்தைப் பாா்வையிட வரும் பொதுமக்கள் ஆகியோரது நலனைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என கருத்து தெரிவித்தது. பின்னா், பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டம் அமலில் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Summary

Is the government abandoning the plan to erect a pen monument for Karunanidhi

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.