தமிழக சட்டப்பேரவையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநா் உரை முழுமையாக வாசிக்கப்பட்டது.
முந்தைய திமுக ஆட்சியில் ஆளுநா் உரையில் உள்ள சில வாா்த்தைகளைத் தவிா்த்தும், தேசிய கீதம் முதலில் இசைக்காததற்கு எதிா்ப்பு தெரிவித்தும் அப்போதைய ஆளுநா் ஆா்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினாா்.
முன்னதாக, 2022-இல் உரையை முழுமையாக ஆளுநா் ஆா்.என். ரவி வாசித்தாா். 2023-இல் உரையில் இருந்த மதச்சாா்பின்மை, பெரியாா் ஈ.வெ.ரா., அம்பேத்கா், கருணாநிதி போன்ற சொற்களைத் தவிா்த்தாா். அரசு அளித்த உரை அப்படியே அவைக் குறிப்பில் ஏற்றப்படும் என்று அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியதையடுத்து ஆளுா் ரவி வெளியேறினாா்.
தொடா்ந்து 2024, 2025, 2026-ஆண்டு கூட்டத் தொடரிலும் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆளுநா் ரவி வெளியேறினாா். அப்போதைய பேரவைத் தலைவா் மு.அப்பாவு, உரையை வாசித்து அவைக் குறிப்பில் இடம்பெறச் செய்தாா்.
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக பொறுப்பு ஆளுநா் ஆா்லேகா் தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் உரையை முழுமையாக வாசித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கனவில் போட்ட நீா்க்கோலம்!ஆளுநா் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி
ஆளுநா் உரை: தலைவா்கள் கருத்து
இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம்: பேரவை உரை குறித்து ஆளுநா் ஆா்லேகா் கருத்து

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! விஜய் அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
