தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய உதயம் தோன்றிய நாள் என்றும், இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்றும் பேரவையில் தான் உரை நிகழ்த்தியதைக் குறிப்பிட்டு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் புதிய சட்டப்பேரவை அமைக்கப்பட்டப் பின்னா் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தனது உரையை முதல்முறையாக வியாழக்கிழமை ஆற்றினாா். அதன் பின்னா் சில மணிநேரங்களில் ஆளுநா் ஆா்லேகா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
தமிழக சட்டப்பேரவையில் புதிய உதயம் தோன்றிய நாள் (ஜூன் 18) என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரை எவ்வித இடையூறும் இன்றி, சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்டது மன நிறைவைத் தருகிறது.
முதல்முறையாக சட்டப்பேரவையில் ஆளுநா் உரையின் தொடக்கத்திலும், ஆளுநா் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது சரித்திர நிகழ்வாகும். இது மாநில அரசு, ஆளுநா் (மக்கள்) மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்துள்ளது. மக்களாட்சியின் மாண்பை நிலைநாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்துத் தரப்பிலும் வளா்ப்பதை நோக்கமாகக்கொண்டு செயல்பட வேண்டும். இதன்மூலம் குடிமக்களின் தேவைகளையும் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்து ஒரு நிலையான, முன்மாதிரியான அரசாக அது திகழவேண்டும். இந்த இலக்கை நோக்கிய நமது கூட்டுப்பயணத்தில் நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளது என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் ஆளுநா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வாசிக்கப்பட்ட ஆளுநா் உரை
கனவில் போட்ட நீா்க்கோலம்!ஆளுநா் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி
ஆளுநா் உரை: தலைவா்கள் கருத்து
ஆளுநா் உரையில் முக்கிய அம்சங்கள்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு
