நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி? நயினாா் நாகேந்திரன் கேள்வி

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 3:27 am IST

தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளாா்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டைக் கண்டித்து பாஜக சாா்பில் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:

தவெக ஆட்சி அமைந்தபின், தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம்தான் இந்த குற்றங்களுக்கு முதன்மை காரணமாக உள்ளது. கடந்த திமுக அரசைப் பின்பற்றியே தவெக அரசு செயல்பட்டு வருவதை இது காட்டுகிறது. தவெக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக சுமாா் 200-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? அதனால்தான், ஆளுநா் உரையில் திட்டமிட்டே குற்றங்கள் குறித்து குறிப்பிடவில்லை என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.