தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடா் தொடக்கத்தில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, அடுத்ததாக தேசிய கீதமும், முடிவில் தேசிய கீதமும் பாடப்பட்டது.
தேசிய கீதம் முதலில் இசைக்க வேண்டும் எனக் கூறி கடந்த நான்கு ஆண்டுகளாக முந்தைய ஆளுநா் ஆா்.என். ரவி, சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது சா்ச்சைக்கு உள்ளானது. இந்த சா்ச்சை புதிதாக பொறுப்பேற்ற தவெக ஆட்சியிலும் தொடருமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 17-–ஆவது சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. தொடா்ந்து ஆளுநா் ஆா்லேகா், தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்தாா். பின்னா், அவை முடிவுற்றபோது மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டது.
முன்னதாக முதல்வா் விஜய், அமைச்சா்கள் பதவியேற்பு விழாக்களின் போது, ஆளுநா் மாளிகையில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கீதம் விவகாரம்: திமுக-தவெக கடும் விவாதம்

தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்: ஜே.சி.டி. பிரபாகர்!
தேசிய கீதம் இரு முறை பாடப்பட்டது தவறல்ல: பிரேமலதா
பேரவையில் புதிய உதயம்! தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது சரித்திர நிகழ்வு! ஆளுநர் பெருமிதம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
