தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தமிழக காவலர்களின் பாதுகாப்புக்கு பிற மாநில காவல்துறையை நாட வேண்டும்போல: பாஜக

தூத்துக்குடியில் காவல் அதிகாரிகள் மீது தாக்குதல் சம்பவம் குறித்து தவெக அரசை நயினார் நாகேந்திரன் விமர்சனம்

News image

முதல்வர் விஜய் |பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 9:41 pm IST

தூத்துக்குடியில் காவல் அதிகாரிகள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தவெக அரசை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தூத்துக்குடியில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசியவர்களைக் கைது செய்ய சென்ற காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்திவிட்டு, குற்றவாளிகள் தப்பியோடியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில், பொதுமக்களின் பாதுகாப்புதான் கேள்விக்குறியாகி வருகிறது என்று பார்த்தால், சிங்கப்பெண் சிறப்புப் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களுக்கு பாலியல் தொல்லை, குற்றவாளிகளைப் பிடிக்க சென்றவர்களுக்கு அரிவாள் வெட்டு என காவலர்களின் நிலைமை படுமோசமாகிக் கொண்டிருக்கிறது.

போகிற போக்கைப் பார்த்தால், தமிழகக் காவலர்களின் பாதுகாப்புக்கே நாம் பிற மாநிலக் காவல்துறையின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கும் போல.

அக்மார்க் ரௌடிகளை எல்லாம் தமிழகத்தின் முக்கிய அமைச்சராக அமர்த்தினால், எஞ்சியுள்ள குற்றவாளிகளுக்கு அரசைக் கண்டால் இளக்காரமாகத் தானிருக்கும் என்பதை முதல்வர் விஜய் எப்போது உணர்ந்து தனது கட்சியை தூய்மைப்படுத்துகிறாரோ, அப்பொழுது தான் தமிழகத்தின் அமைதி உறுதி செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

Summary

BJP has sharply criticized the TVK government regarding the attack on police personnel in Thoothukudi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.