பாஜகவின் பி அணியாக திமுக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது, "ஆளுநர் உரை என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் ஒரு நிகழ்வு. கடந்த காலங்களில் ஆளுநர் உரை விவகாரத்தில் திமுக செய்த அரசியல் பற்றி உங்களுக்கே தெரியும்.
முதலில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி சொல்வதும், அதனைக் காரணங்காட்டி திமுகவினர் வெளிநடப்பு செய்வதும் திட்டமிட்டு இருவரும் பேசிவைத்துக் கொண்ட நாடகம்தான்.
திமுகவின் கொள்கையை நாங்கள் காப்பியடித்ததாக ஒருவர் கூறினார். நாங்களும் அதே மாநில உரிமை மற்றும் சமூக நீதியை பேசினோம். எங்களால் இதனை சுமூகமாக நடத்த முடிந்தது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை நாங்கள் எப்படி கொண்டு சென்றோம்? அதனை ஏன் அவர்கள் (திமுக) செய்யவில்லை? இதிலிருந்தே பாஜகவின் பி டீமாக திமுகதான் செயல்பட்டது தெரிய வருகிறது. அவர்கள் இருவரும் திட்டமிட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய நிகழ்வு மூலம் சுமூகமாக தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டு, எவ்வித பிரச்னையுமின்றி ஆளுநர் உரை சிறப்பாக நடைபெற்றது. மக்களை அவர்கள் எந்த அளவுக்கு முட்டாளாக்கி வைத்திருக்கின்றனர் என்பதற்கு இது ஒன்றே சாட்சி" என்று தெரிவித்தார்.
Summary
Minister Arunraaj criticizes the DMK for acting as the BJP's 'B-team'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுநரின் அமைதியான உரை! தமிழிசை சௌந்தரராஜன் | BJP | TVK | DMK

”எந்த பெயரில் வந்தாலும் பாஜகவுக்கு தோல்வி மட்டும்தான்!” அமைச்சர் அருண்ராஜ் | BJP | TVK

பாஜகவின் மற்றொரு முயற்சியே அண்ணாமலை- அமைச்சர் அருண்ராஜ்

தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


