இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி! நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்...

News image

நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன. - கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2026, 2:16 pm IST

பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படையில் உள்ள காவலருக்கே பாதுகாப்பில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிப் படையிலுள்ள பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கி சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சிதான் தூய சக்தியா? வெட்கக்கேடு!

"நான் உங்கள் அண்ணன்" என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் விஜய், முதலில் இப்புகாரைத் தீர விசாரித்து, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளம்பரத் திட்டங்களை அறிமுகம் செய்வதோடு நில்லாது, தமிழகப் பெண்களுக்கான பாதுகாப்பை உண்மையாக உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றியவரும், தற்போது 'சிங்கப்பெண்' சிறப்புப் பணிக்குழுவில் இருப்பவருமான பெண் தலைமைக் காவலருக்கு அதே காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Summary

Nainar Nagendran Criticizes TVK Government for women safety

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.